இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் வெளியீடான ‘பராசக்தி’ படம், கடந்த 10ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம்.
இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாளில் இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சேத்தன் கலந்து கொண்டு பேசுகையில், “இந்த படத்திற்கு தொடர்ச்சியாக பாராட்டு வருகிறது. ரொம்ப சந்தோஷம். முதலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணா கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்த சுதா கொங்கராவிற்கு நன்றி. இந்த கெட்டப்பில் இலங்கையில் ஒரு படப்பிடிப்பு முடித்துவிட்டு அடுத்த நாள் சிவகார்த்திகேயனை பார்த்தேன். அவர் சொன்ன முதல் வார்த்தை உங்களை அந்த கதாபாத்திரத்தில் பார்க்கும்போது கூஸ்பம்ஸாக இருந்தது என்றார்.
அதேபோல் டப்பிங்கிலும் சுதா கொங்கரா கூஸ்பம்ஸாக இருக்கிறது என்றார். இதே வார்த்தையை சொல்லி வைத்தது போல் எனக்கு வந்த அனைத்து பாராட்டுகளிலும் அந்த கூஸ்பம்ஸாக வார்த்தை இருந்தது. அதனால் ஒரு கூஸ்பம்ஸ் படமாக இது மாறிவிட்டது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/16-40-2026-01-14-15-30-58.jpg)