மருத்துவர் சசிகுமார் எழுதிய ‘கன்னக் குழியில் விழுந்த கண்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் சேரன், கோபி நயினார், சிம்பு தேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலை பாடலாசிரியர் அறிவுமதி வெளியிட திரைப்பட இயக்குநர்கள் பெற்றுக் கொண்டனர்.

Advertisment

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சேரன், “ஒரு பெண்ணை தான் காதலிக்க வேண்டும் என்பது இல்லை. பெண்கள் மீது மட்டுமே காதல் என்பது கொச்சையானது. காதலில் என்ன நல்ல காதல் கள்ளக்காதல். காதல் என்பது காதல்... அவ்வளவுதான். 

Advertisment

காதல் என்ற வார்த்தை இயற்கையானது. கள்ளக்காதல் என்ற வார்த்தை இந்த சமூகத்தின் ஆதிக்கம். ஒரு உயிர் மீது வைக்கும் நேசிப்பு தான் காதல். அது எந்த உயிராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு எந்த வயதாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றார்.