தமிழ் சினிமாவில் கோலோச்சிய மற்றும் பெரும் பங்களிப்பு ஆற்றிய மறைந்த பிரபலங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அவர்கள் வசித்த தெருக்களுக்கு அவர்களின் பெயர்களை வைத்து வருகிறது. இதுவரை கலைவாணர் என்.எஸ்.கே, சிவாஜி கணேசன், கண்ணதாசன், டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், விவேக், ஜெய்சங்கர் ஆகியோர்களின் பெயர்களை சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மூன்று இசைக்கலைஞர்களின் பெயர்களில் இன்று சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமாண்டி சாலைக்கு ‘எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதே போல் மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு, ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெருவிற்கு, ‘திருச்சி லோகநாதன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பெயர் பலகையை திறந்து வைத்தார் இந்நிகழ்வில் மூன்று இசையமைப்பாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
Follow Us