நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக பராசக்தி உருவாகியுள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்க, டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்க இதற்கு தணிக்கை சான்று இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் படக்குழு மற்றும் விநியோக நிறுவனங்கள் 10ஆம் தேதி வெளியாகும் என்பதை உறுதி செய்திருந்தனர். இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் (10.01.2026) பராசக்தி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என மத்திய தணிக்கை வாரியமானது தெரிவித்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் 10ற்கும் மேற்பட்ட இடங்களில் நீக்கங்களைத் தனிக்கை வாரியம் அறிவுறுத்தியதாகவும் ஆனால் அந்த நீக்கங்களைப் படக்குழுவினர் இன்று (08.01.2026) வரை செய்யப்படவில்லை என்ற காரணத்தினால் தனிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளதாகத் தணிக்கை வாரியத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை மறுநாள் பராசக்தி படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதே சமயம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயட் மூவிஸ் தரப்பில் இருந்து தனிக்கை வாரியத்திற்குக் குறித்த நேரத்தில் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், கூடுதலாகத் தேவைப்படும் நீக்கங்களைச் செய்து பட வெளியீடு செய்வதற்கு நிறுவனம் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை மறுநாள் பராசக்தி திரைப்படம் தமிழ்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us