Advertisment

உச்ச நீதிமன்றத்திலும் ஜன நாயகனை விடாமல் துரத்தும் தணிக்கை வாரியம்!

437

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். 

Advertisment

இதையடுத்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மேல்முறையீடு மணு தாக்கல் செய்துள்ளது. இதை அவச வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisment

இந்த நிலையில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. கேவியட் மனு என்றால், ஒரு வழக்கு விசாரணைக்கு வரும் போது தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்பதை குறிக்கும். இதனால் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரும் போது தணிக்கை வாரியம் தங்களது வாதங்களை முன்வைக்கும். அதன் பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும்.  

censor board Supreme Court Jana Nayagan actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe