ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவால் பரபரப்பான கோலாலம்பூர். நாளை மலேசியாவில் நடைபெறவுள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. விஜயின் கடைசிப் படம் இது என்பதால் ரசிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாளை (27-12-25) நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியாவிற்கு புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், மற்றோரு வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைப் பிரபலங்களும் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.இவ்விழாவில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன், பாடகர்கள், எஸ்.பி.பி. சரண், கிரிஷ், ஹரிஷ் ராகவேந்திரா, திப்பு, பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இவர்களைத் தவிர நடிகர் தனுஷ் மற்றும் பலப் பிரபலங்களும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. "அரசியல் பேசக்கூடாது, கொடி உள்ளிட்ட கட்சி சார்ந்த பொருட்களை நிகழ்ச்சிக்கு கொண்டுவரக் கூடாது, முழுக்க முழுக்க சினிமாவிற்கான விழாவாகவே மட்டும் இது இருக்க வேண்டும்" என பல நிபந்தனைகளை அந்நாட்டு அரசு விதித்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் அனைவரின் மத்தியிலும் அதிகரித்துள்ளது.இதற்கிடையில் "தளபதி திருவிழா" என எழுதப்பட்ட கார் ஒன்று அந்த பகுதியில் வலம் வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/p-2025-12-26-14-10-30.jpeg)