பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி 2019ஆம் ஆண்டு தொழிலதிபர் ரஞ்சித் பிந்திராவுடன் இணைந்து பெங்களூரில் ஒரு பப் ரெஸ்டாரண்ட் தொடங்கினார். அந்த பப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பில் கட்டுவது தொடர்பாக இரு குழுவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி வீடியோசமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் தொழிலதிபர் சத்தியா நாயிடுவும் இடம்பெற்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பேசிய சத்ய நாயுடு நண்பர்களுடன் இரவு உணவுக்காக மட்டுமே பப்பிர்க்கு சென்றதாகவும் வேறு எந்த தவறும் செய்யவில்லை எனவும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தாமாக முன்வந்து விசாரித்தனர்.
அப்போது சிசிடிவி காட்சிகளை பார்க்கையில் நள்ளிரவு 1.30 மணி வரை பப் இயங்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட பப்பை நடத்திவந்ததாகவும் விதிகளை மீறி இரவு நேர விருந்துகளை அனுமதித்ததாகவும் பெங்களூரு போலீசார் பப் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Follow Us