Advertisment

“தணிக்கை சான்றிதழில் தலையிட முடியாது” - ‘திரௌபதி 2’ விவகாரத்தில் நீதிமன்றம்

20 (46)

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வரும் நாளை வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மதுரை மாவட்​ட மேலூரை சேர்ந்த மகா​முனி அம்​பல​காரர் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அவர் கூறிய மனுவில், “திரு​வண்​ணா​மலையை தலை​மை​யிட​மாக கொண்டு 14ஆம் நூற்​றாண்​டில் ஆட்சி புரிந்த மன்​னன் வீர வல்​லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்​படை​யில் திரௌபதி 2 படம் தயாரிக்​கப்​பட்​டுள்​ள​தாக படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

Advertisment

வீர வல்​லாள தேவன் என்​பவர் கள்​ளர் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தற்கு பல கல்​வெட்​டு​கள், செப்பு பட்​ட​யங்​கள் உள்​ளிட்ட வரலாற்று ஆவணங்​கள் உள்​ளன. ஆனால், திரெளப​தி 2 படத்​தில் வீர வல்​லாள தேவனை வன்​னியர் சமூகத்​தைச் சேர்ந்​தவ​ராக இயக்​குநர் மோகன் சித்​தரித்​துள்​ளார். ​படத்​தின் சுவரொட்​டிகளில் வீர வல்​லாள தேவன் என்​பதை வீர வல்​லா​ளன் என்று மட்​டும் குறிப்​பிட்​டுள்​ளனர். இது உள்​நோக்​கம் கொண்​டது. மேலும், கள்​ளர் சமூகத்​தினரிடையே கொந்​தளிப்பை ஏற்​படுத்​தும். இதை கண்​டித்து மேலூரில் பல போராட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

இந்​நிலை​யில், படத்​துக்கு அவசர அவசர​மாக யு/ஏ சான்​றிதழை தணிக்கை வாரி​யம் வழங்​கி​யுள்​ளது. யு/ஏ சான்​றிதழை திரும்​பப் பெறு​மாறு தணிக்கை வாரி​யத்​திடம் மனு அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. எனவே, திரௌபதி 2 படத்தை தணிக்கை வாரி​யம் மறு ஆய்வு செய்​ய​வும், படத்​தில் இடம்​ பெற்​றுள்ள வரலாற்​றுப் பிழைகளை திருத்​தம் செய்​யும் வரை படத்தை வெளி​யிட இடைக்​கால தடை விதிக்க வேண்​டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த மனு நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் தலைமையில் விசா​ரணைக்கு வந்​தது. அப்போது மத்திய அரசு சார்பில் படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு பேசிய நீதிபதி, தணிக்கை வாரி​யம் சான்​றிதழ் வழங்​கி​யுள்​ள​தால் நீதி​மன்​றம் தலை​யிட முடி​யாது எனக் கூறி பொதுநல வழக்கு தொடர உரிமை வழங்​கி மனுவை முடித்​து​வைத்தார்.

Draupathi 2 madurai high court mohan g
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe