Advertisment

சினிமாவாக உருவாகும் கேரம் வீரர் காஜிமா வாழ்க்கை கதை

11 (21)

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கை சரிதம் தற்போது சினிமாவாக உருவாகிறது. 

Advertisment

மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.

Advertisment

காஜிமாவின் பயோபிக் 'தி கேரம் குயின்' என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தை கர்னாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தொடக்க விழா இன்று பிரம்மாண்டமாக பூஜையுடன் நடை பெற்றது. இப்படத்தில் காஜிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கின்றார். விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஜிமா தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார். 

bio graphy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe