Advertisment

அல்லு அர்ஜூன் தொடர்பான சர்ச்சை - விளக்கமளித்த பிரபலம்

19 (71)

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். தனது கரியரின் பீக்கில் இருக்கும் அவர் அட்லீ இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இவரை சந்திக்க ஏகப்பட்ட விதிமுறைகள் இருப்பதாக சமீபத்திய பாட்கேஸ்ட் ஒன்றில் பிராண்ட் மேலாளர் காவேரி வருவா என்பவர் கூறி இருந்தார். அவர், கூறியதாவது, அல்லு அர்ஜுனை சந்திக்கும் போது அவரது கண்களை பார்க்கக்கூடாது, கை கொடுக்கக் கூடாது, மூன்றடி தூரம் தள்ளி நிற்க வேண்டும் போன்ற 42 கடுமையான விதிமுறைகள் இருக்கிறது என்றார். 

Advertisment

இது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியது. இதனால் பேட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். பின்பு யூட்யூபில் அந்த பாட்கேஸ்ட் நீக்கப்பட்டு விட்டது. அதுபோக பேட்டி கொடுத்த காவேரி வருவாவின் இன்ஸ்டாகிராம் பக்கமும் டீ - ஆக்டிவேட் செய்யப்பட்டது. இது போக அவரைப் பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஸ்வீகிருதி, காவேரி வருமாவுக்கு பேட்டியை நீக்க வேண்டும் என தொடர் மிரட்டல் வந்ததாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இது இந்த விவகாரத்தை இன்னும் பெரிதாக்கியது. 

Advertisment

இதனை தொடர்ந்து அல்லு அர்ஜூன்ம் தரப்பு விளக்க அறிக்கை அளித்தது. அதில், அந்த கருத்துகல் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை சட்ட ரீதியாக அணுகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காவேரி வருவா தற்போது அந்த பாட்கேஸ்ட் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “அந்தப் பாட்கேஸ்டில் குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் ரீல்ஸாக சமூக வலைதளங்களில் பரவியது. அது மூன்றாம் தரப்பினரால் அதன் ஒரிஜினல் அர்த்தத்தை விட தவறுதலான அர்த்தத்தில் மாற்றப்பட்டது. 

அதில் தொழில் முறை தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமே என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். மற்றபடி எந்த ஒரு தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கவோ அவர் மீது எந்த ஒரு குற்றத்தையும் சுமத்தவோ பேசியது இல்லை. என்னுடைய நோக்கமும் அது இல்லை. இருப்பினும் அந்த நோக்கத்தோடு பாட்டெஸ்ட் பரப்பப்படுவதால் அதனை முழுவதுமாக யூட்யூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களிலிருந்து நீக்கையுள்ளோம். எங்களுடைய நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் இந்த விளக்கத்தை தெளிவு படுத்துகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

allu arjun
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe