குறும்படத்தில் நடித்து பின்பு காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் பாபி சிம்ஹா. பின்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்காக தேசிய விருதும் வென்று இருந்தார்.
பின்பு ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். ஆனால் ஹீரோவாக நடித்த கோ 2, பாம்பு சட்டை, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேசமயம் வில்லனாக நடித்த கருப்பன், சாமி 2 உள்ளிட்ட படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. இருப்பினும் தொடர்ந்து நடித்துக் கொண்டே வந்தார். தமிழை தாண்டி மலையாளம் தெலுங்கு கன்னடத்தில் ஒரு படமும் நடித்து வந்தார். கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/06/17-9-2025-11-06-13-09-08.jpg)
இந்த நிலையில் இன்று அவர் பிறந்த நாள் காண்கிறார். இதனையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது கோவில் சன்னதியில் தியானம் செய்தும் பிரார்த்தனை செய்தார். இவரது புது படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வராத நிலையில் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/18-9-2025-11-06-13-08-04.jpg)