கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்தது 'அட்டகத்தி' படம். இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இதில் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படம் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தினேஷ் தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனை தெடர்ந்து பலப் படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வரிசையில், விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என அனைத்துப் படங்களும் பாராட்டைப்பெற்றன. அந்த வகையில், சமீபத்தில் அவர் நடித்த "லப்பர் பந்து" எனும் படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இது அவரின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இவ்வாறாக அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மக்களிடம் பேசுபொருளாகவும், பாராட்டத்தக்க வகையிலும் அமைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள படம் ‘கருப்பு பல்சர்’ ஆகும். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்குகிறார். இப்படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தினேஷின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படம் வருகிற 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தினேஷின் ஒவ்வொரு படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வரும் நிலையில், தற்போது வெளியாகவுள்ள கருப்பு பல்சர் படமும், நல்ல வரவேற்பைப் பெற்று பெரிய அளவிலான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us