இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா அணியில் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ரூ.9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தற்போது இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் பிஜேபி மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. 

Advertisment

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் செரீப் உஸ்மான் ஹடி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் சூழலில் இதுவரை மூணு இந்து நபர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில் வங்கதேச வீரரை அணியில் ஒப்பந்தம் செய்ததற்காக அணியின் உரிமையாளரான ஷாருக் கானை இந்துத்துவா ஆதரவாளர்களோடு இந்து மதகுருக்கள் மற்றும் பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

Advertisment

உ.பி-யை சேர்ந்த பாஜக தலைவர் சங்கீத் சோம், “பங்களாதேஷில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஷாருக்கானிடம் இருப்பது இந்திய மக்களால் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் ஒரு நாட்டைச் சேர்ந்த வீரரிடம் முதலீடு செய்கிறார். அவர் ஒரு துரோகி. ஷாருக்கான் போன்றவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்றார். 

பின்பு சிவ சேனா தலைவர் சஞ்சய் நிருபம், “ஷாருக்கான் ரஹ்மானை தனது அணியில் இருந்து நீக்க வேண்டும். இது அவருடைய சொந்த நன்மைக்கும் இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கும்” என்றார். இதே போல் இந்து மதகுருமாக்களும் ஷாருக்கானுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். 

Advertisment