இந்தியில் 2000ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சி தொடர் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி'. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நடித்திருந்தார். இதுதான் அவரை பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. பின்பு தான் பாஜக-வில் இணைந்து தேர்தலில் வெறி பெற்று அமைச்சரவையில் இடம் பெற்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்விபெற்றார். 

Advertisment

இந்த நிலையில் அவருக்கு அடையாளம் பெற்றுத் தந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது 15ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. கடந்த ஜுலை முதல் சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் லேட்டஸ் புரொமோ அண்மையில் வெளியானது. அதில் ஸ்மிருதி இராணி ஒரு பெரிய பிரபலத்தை வரவேற்க்கும் வகையில் அமைந்திருந்தது. அந்த பெரிய பிரபலம் மைக்ரோசாஃப்டின் நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் என சொல்லப்பட்டது. இதனை ஸ்மிருதி இராணியும் ஒரு பேட்டியில் உறுதிப் படுத்தியிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் சீரியலின் புது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சர்பிரைஸாக பில் கேட்ஸ் இடம் பெற்றிருந்தார். அவரை ஸ்மிருதி இராணி வீடியோ காலில் வரவேற்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் இந்திய தொலைக்காட்சி தொடர்களில் முதல் முறையாக பில் கேட்ஸ் தோன்றுகிறார். இந்த சீரியலில் மூன்று எபிசோடுகளில் அவர் தோறவுள்ளார். இந்த சீரியலிக்கு முன் அமெரிக்காவின் ‘தி பிக் பேங் தியரி’ எனும் சீரிஸில் பில் கேட்ஸ் தோன்றியிருக்கிறார். இதையடுத்து அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த சீரியலின் எபிசோட் இன்று முதல் ஸ்டர் ப்ளஸ் மற்றும் ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.