கன்னட பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான உபேந்திரா கடைசியாக தமிழில் வெளியான ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டிருந்தார். அதாவது அவரது ஃபோனும் அவரது மனைவியான நடிகை பிரியங்கா ஃபோனும் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். 

Advertisment

முதலில் பிரியங்கா, ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு அவரது ஃபோனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கை தொட்டவுடன் அவரது வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு அதில் இருக்கும் அனைத்து நம்பர்களுக்கும் ரூ.55,000 அவசரமாக வேண்டும் என மெசேஜ் சென்றுள்ளது. இது உண்மை என நம்பி, பல நபர்கள் பணம் அனுப்பியுள்ளனர். மொத்தம் ரூ.1.5 லட்சம் அந்த ஹேக்கருக்கு சென்றுள்ளது. இதில் பிரியங்கா மகனும் ரூ.50, 000 பணம் அனுப்பியுள்ளார். 

Advertisment

இதனிடையே உபேந்திரா ஃபோன் மூலம் மெசேஜ் வந்த நம்பருக்கு ஃபோன் செய்துள்ளனர். அவரது ஃபோனும் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து உபேந்திரா அனைவரும் என்னுடைய நம்பர் அல்லது எனது  மனைவியின் நம்பரில் இருந்தோ எதாவது பணம் கேட்டு மெசெஜ் வந்தால் தயவு செய்து அணுப்ப வேண்டாம் என சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள சதாசிவநகர் காவல் நிலையத்தில் மோசடி குறித்து புகாரளித்தார். 

இந்த நிலையில் அந்த ஹேக்கரை சதாசிவநகர் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் பீகாரை சேர்ந்த விகாஸ் குமார் என்பது தெரியவந்துள்ளது. அவரை டெல்லியில் வைத்து கைது செய்த காவல் விசாரணைக்காக பெங்களூருக்கு கொண்டு சென்றனர். அவரும் அவரது கூட்டாளிகளும் பெரிய அளவில் சைபர் கிரைமில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை மத்திய பிரிவு சைபர் காவல்துறை மற்றும் சதாசிவ நகர் காவல்துறை இணைந்து விசாரித்து வருகின்றனர். 

Advertisment