தென்னிந்திய அளவில் கவனம் செலுத்தி பிரபல நடிகையாக வலம் வந்தவர் பாவனா. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவம் காரணமாக சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தார். 

Advertisment

பின்பு அந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான ஒரு நடிகர், சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இதனால் மிகவும் மன வேதனை அடைந்த பாவனா எமோஷ்னலாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் நீதிமன்றத்தின் மீது கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இருப்பினும் சினிமாவில் பழையபடி நடிக்க தொடங்கிவிட்டார். இப்போது புதிதாக மலையாளத்தில் ‘அனோமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் அதன் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். 

Advertisment

அந்த வகையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்களில் அவர் சிபிஎம் கட்சி சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவல் குறித்து பதில் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “அந்த செய்தி முற்றிலும் போலியானவை. இப்படி ஒரு செய்தி எப்படி வெளியானது என்று எனக்கு தெரியாது. அதில் துளியும் உண்மை இல்லை. முதலில் அந்த செய்தியை கேள்விப்பட்டபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அது ஒரு பெரிய கேலிக்கூத்தானது. இது குறித்து நான் ஏற்கனவே சமூக ஊடங்களில் தெளிவு படுத்தியுள்ளேன்” என்றார்.