தமிழ் சினிமாவில் மண் சார்ந்த கதைகளையும் யதார்த்தமான காட்சி அமைப்புகளையும் தொடர்ந்து காட்டி தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் பாரதிராஜா. இயக்குனர் சிகரம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், சமீபத்தில் உடல் நிலை பிரச்சனைக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

Advertisment

தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் அவர் உடல் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து கடந்த 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட மருத்துவ நிர்வாகம், மூச்சுத் திணறல் காரணமாக பாரதிராஜா அனுமதிக்கப்பட்டதாகவும் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரது ரசிகர்களும் நலம் விரும்பிகளும் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர். 

Advertisment

இந்த நிலையில் மருத்துவ நிர்வாகம் மீண்டும் பாரதிராஜா உடல் நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், “பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவால் அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.