Advertisment

“அதை ட்ரை பண்ணாதீங்க... நல்லது கிடையாது” - மிகவும் பாதிக்கப்பட்ட பரத் மாணவர்களுக்கு அறிவுரை

400

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பரத். செல்லமே, காதல், பட்டியல் என ஏகப்பட்ட ஹிட் படங்களைக் கொடுத்து வளர்ந்து வந்த அவர் சமீப காலமாக போதிய ஹிட் படங்கள் கொடுக்காமல் லைம் லைட்டில் இல்லாமல் போனார். ஆனால் தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். கடைசியாக ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’ படத்தில் நடித்திருந்தார். இப்பட 2024ஆம் ஆண்டு வெளியானது. இப்போது இரண்டு மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார்.   

Advertisment

இந்த நிலையில் சமீபத்திய கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ‘555’ படத்திற்காக அவர் வைத்த சிக்ஸ் பேக் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நேர்மையாக சொல்லப்போனால் அது ரொம்ப கஷ்டம். அதை யாரும் ட்ரை பண்ணாதீங்க. உடலுக்கு ஆரோக்கியமானது இல்ல. உடலின் உள்ளுறுப்புகள் மிகவும் பாதிப்பு அடையும். நிறைய தியாகமும் வாழ்க்கை முறையை மாற்றவும் வேண்டும். இப்போது இளைஞர்கள் சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என ஆசைப்பட்டால், ஒரு தடவை வைத்து விட்டு விட்டுவிடுங்கள். அதை வாழ்க்கை முழுவதும் கொண்டு செல்வது உடலுக்கு நல்லது கிடையாது” என அறிவுறுத்தினார்.   

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், “555 படம் பண்ணும் போது ஒன்றரை வருஷம் மேரி பிஸ்கட், சிக்கன், முட்டை, காந்த திராட்சை மட்டும் தான் சாப்டேன். உடம்பில் ஹார்மோன் மாற்றம் பயங்கரமாக நடக்கும். கோவம் நிறைய வரும். ரொம்ப டயர்டா இருக்கும். சாப்பிட முடியாது. இது போல் நிறைய விஷயங்கள் இருக்கு” என்றார்.    

student bharath
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe