நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கு 26 படத்திற்கு 23, சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பெற்றுள்ளது..

Advertisment

இவ்விழாவினில் பாக்கியராஜ், ஆர்கே செல்வமணி, தனஞ்செயன், டி.சிவா, இயக்குனர் ஆர் வி உதயகுமார், இயக்குனர் பேரரசு, இயக்குனர் அஜயன் பாலா, குகன், நடிகர் விதார்த், தயாரிப்பாளர் ஜெயபிரகாஷம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்வில் பாக்யராஜ் பேசுகையில், “வெள்ள குதிர படத்தின் நாயகன் ஹரிஷ் ஒரியை பார்க்கையில் நடிப்பதற்காகவே ஊரை விட்டு வந்து 13 வருடமாக கூத்துப்பட்டறை கலைஞனாக நடித்து அனுபவம் பெற்று, சிரமப்பட்டு.. இன்று இந்த வெள்ளகுதிர மூலம் நாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். 

Advertisment

நடைபாதை இல்லாத மலை உச்சியில் 13 கிலோமீட்டர்,  5 முறை மலை ஏரி படப்பிடிப்பு நடத்துவது என்பது லேசான காரியம் இல்லை. அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து 48 நாட்கள் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பேச்சில் படத்தின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது” என்றார்.