சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து, இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆஷிகா அசோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் சாண்ட்ரா அனில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா, சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பேராடி, நிழல்கள் ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வினில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, “தயாரிப்பாளர் சதீஷ் படம் பார்த்ததாக சொன்னார். அவர் சமீபத்தில் செய்த படம் இந்திக்கு ரீமேக் ஆகிறது. இப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தால் தான் ரீமேக் செய்கிறார்கள். அவர் படம் பார்த்து நன்றாக இருப்பதாக சொல்வது படத்திற்கு கிடைத்துள்ள பெரிய பாராட்டு. தயாரிப்பாளர் சையத், இயக்குநர் சந்தோஷ், மற்றும் படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷ் என்னை அழைக்கும் போது, படத்தின் அவுட்லைன் சொன்னார், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இருந்தாலும், மிகத் தெளிவாக கதை சொன்னார். அதிலேயே அவர் திறமை தெரிந்தது. இங்கு தயாரிப்பாளர் கதை சொன்னது இன்னும் அருமையாக இருந்தது.
க்ரைம் சப்ஜெக்ட் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் அதிகம் க்ரைம் ஆக்சன் படங்கள் தான் பார்ப்பேன். முதல் படத்திலேயே சந்தோஷ் அருமையாக இதை எடுத்துள்ளார். இந்தப்படம் யார் நடித்திருக்கிறார் என்பதை விட, என்ன மாதிரி கதையை எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். நானும் இப்படம் பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் ஆடியன்ஸ் ரிவ்யூ வந்த பிறகு நன்றாக இருந்தால், படத்திற்கு போகலாம் என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே பத்திரிக்கையாளர்கள் இம்மாதிரி சின்ன படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் தந்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/09/08-18-2025-12-09-19-13-18.jpg)