Advertisment

மீண்டும் டைரக்‌ஷன்; பாராட்டு விழாவில் பாக்யராஜ் அறிவிப்பு

483

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கே. பாக்யராக் இன்று தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். மேலும் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து பயணிக்கிறார். இந்த இரண்டு விழாவையும் ஒட்டி அவருக்கு ‘பாக்யராஜ் 50’ எனும் தலைப்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Advertisment

இந்த விழா தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். இதில் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வி அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேடையில் பேசிய பாக்யராஜ் இதுவரை தான் கடந்து வந்த பாதையை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். அப்போது மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

பாக்யராஜ் பேசியதாவது, “50 வருஷம் என்பது, எனக்கே மலைப்பாய் தான் இருக்கிறது. இன்னமும் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதோடு இந்த வருஷத்தில் இருந்து வெப் சீரிஸும் படமும் டைரக்ட் பண்ணப் போறேன். அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதனால் மீண்டும் புது உத்வேகத்தோடு படங்கள் இயக்க முடிவு செய்துள்ளேன்” என்றார். 

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து பின்பு இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதித்த பாக்யராஜ் இதுவரை 27 படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக அவரது மகனை வைத்து ‘சித்து +2’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2010ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் பிறகு எந்த படமும் இயக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் இயக்கவுள்ளதாக தெரிவித்திருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

director k.bhagyaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe