கோவாவில் கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. நிறைவு விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், அரங்கில் அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா படத்தில் வரும் காட்சியை ஜாலியாக நடித்துக் காண்பித்தார். பின்பு மேடையில் பேசிய அவர், “காந்தாரப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷெப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை செய்து காண்பித்தார். இது சர்ச்சையை உருவாக்கியது. 

Advertisment

அவர் பெண் ஆவி என்று பேசியதும் அக்கதாப்பாத்திரம் போல் நடித்ததும் துளு நாடு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. அது பெண் ஆவி இல்லை பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் கூறி வந்தனர். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேட்டு வந்தனர். இதையடுத்து ரன்வீர் சிங், நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் எப்போதும் மதிப்பதாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பெங்களூரு காவல் துறையில் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரை கைது செய்ய புகார் தாரர் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.