போயபாடி ஶ்ரீனு இயக்கத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அகண்டா 2’. ‘14 ரீல்ஸ் ப்ளஸ்’ எனும் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா, ஆதிப் பினிசெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 5ஆம் தேதி தெலுங்கை தாண்டி தமிழ், இந்தி என மொத்தம் ஏழு மொழிகளில் வெளியாகவிருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக ஈராஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனால் இப்படம் 5ஆம் தேதி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வருத்தத்துடன் ரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிறுவனத்துடன் சமரசம்பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் சுமுக தீர்வு எட்டியுள்ள நிலையில் தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகிறது. படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகவும் 11ஆம் தேதி ப்ரீமியர் காட்சிகள் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/19-37-2025-12-10-12-11-24.jpg)