டி ஸ்டூடியோஸ் மற்றும் டென்வி புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 6ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இயக்குநர் பாலாவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “விஜய்யின் குரு என என்னை சொன்னார்கள். அது தவறு. அவர் தான் எனக்கு குரு. தொழிலில் மட்டும் இல்லை. எல்லா விதத்திலும். என்னை விட ஜூனியராக இருக்கலாம், ஆனால் ஒரு மனுஷன் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது விஜய் தான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டிமென்றால் அவர் எனக்கு தாயுமானவன். 

Advertisment

என்னுடைய நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அதில் முதல் ஆளாக பங்கெடுத்து தாயும் தகப்பனுமாக இருந்து பார்த்து கொள்பவர். நான் நல்லா இருக்க வேண்டும் என நினைக்கிறார். நானும் அவருக்கு அப்படித்தான் நினைக்கிறேன்” என்றார்.