தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெள்ளித்திரை -சின்னத்திரை- டிஜிட்டல் திரை- ஆகிய திரையுலகில் வெளியான படைப்புகளையும் , கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆட் ஃபிலிம் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் - தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் ஈஸ்வர் மற்றும் ரோகிணி சினிமாஸ் ஆகியோர் இணைந்து சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கு ' 7 ஸ்டார் அவார்ட்ஸ் 2025 ' எனும் விருதினை வழங்கி கௌரவிக்க தீர்மானித்தனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கலை விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisment

இந்த விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் - சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட வழக்கமான விருதுடன் ரீ ரிலிஸ் அவார்ட்- பெஸ்ட் ஸ்டோரிடெல்லர் அவார்ட் - பெஸ்ட் ட்ரெண்ட் செட்டர் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் அவார்ட் - பிளாக் பஸ்டர் மூவி அவார்ட்-  ஐகானிக் காமெடியன் ஆஃப் தமிழ் சினிமா - டிரிபியுட் அவார்ட் ஆகிய பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டது. அத்துடன் தொலைக்காட்சி - இணைய தொடர் - ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய பிரபலங்களுக்கும் பிரத்யேக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விருது வழங்கும் நிகழ்வில் இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா- விக்னேஷ் சிவன்- ராம் -அஸ்வத் மாரிமுத்து- அபிஷன் ஜீவந்த் - நடிகர்கள் சௌந்தர்ராஜா,  மகாநதி சங்கர் - ஹர்ஷத் கான்- டி டி எஃப் வாசன் - இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெஸ்ட் ரீ ரிலீஸ் ஆடியன்ஸ் ஃபேவரைட் 7 ஸ்டார் அவார்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ்  கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், '' வாழ்க்கையில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்குவதே பெரிய விசயம். ஆனால் 'அண்ணாமலை', 'வீரா', 'பாட்ஷா', 'சத்யா', 'இந்திரன் சந்திரன்', 'ஆள வந்தான்' என என்னுடைய பட்டியலில் இருக்கும் போது ரசிகர்களின் பேரன்பு அதிகம்.

Advertisment

'பாட்ஷா' படத்தை பற்றி அன்றே பாடலில் குறிப்பிட்டிருக்கிறோம்.  'ஒரே ஒரு சூரியன் தான்.. ஒரே ஒரு சந்திரன் தான்... ஒரே ஒரு பாட்ஷா தான்... ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்... '. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75 வயதாகும் போது சினிமாவில் 50 வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார் .அவருடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'பாட்ஷா'. இந்த திரைப்படத்தை மறு வெளியீடு செய்த போது 1995 ஆம் ஆண்டில் 'பாட்ஷா' முதன்முதலாக வெளியான போது திரையரங்கத்தில் எப்படி வரவேற்பு இருந்ததோ... அதேபோல் இப்போதும் இருந்தது.

பாட்ஷா படத்தின் முதல் பாதி முழுவதும் மாணிக்கமாக நடிக்கும் காட்சிகளை முழுவதுமாக படமாக்கி விட்டோம். ஆனால் பாட்ஷா என்றொரு கதாபாத்திரம் இருக்கிறது. முதல் பாதியில் பாட்ஷா என்ற ஒரு கதாபாத்திரத்தை குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தோம். இரண்டாம் பாதியில் ஹைதராபாத்தில் முதல் காட்சி பாட்ஷா கெட்டப்பில் படமாக்க பட வேண்டும். அந்த நாள் என்னால் மறக்கவே முடியாது. கோல் கொண்டா பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரும் ரஜினிகாந்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். சொன்ன நேரத்திற்கு சரியாக வரும் பழக்கம் கொண்ட ரஜினிகாந்த் படப்பிடிப்பு வருவது தாமதமானதால் அவரை சந்திப்பதற்காக நான் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றேன்.

பாட்ஷா கதாபாத்திரத்திற்கான மேக்கப் செய்து கொண்டு அறையின் வெளிச்சத்தை குறைத்துக் கொண்டு ஒரு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். நான் அவரை பார்த்து வணக்கம் சொன்ன போதும் அதனை கண்டும் காணாமல் அமைதியாக இருந்தார். அங்கும் இங்குமாக நடந்தார். பிறகு கோட் அணிந்தார். அதன் பிறகும் அங்கும் இங்குமாக நடந்து கொண்டே இருந்தார். கழுத்திற்கு ஒரு மஃப்ளரை அணிந்து கொண்டார். அப்போது ஒப்பனைக் கலைஞர் சுந்தரமூர்த்தி ரிம் இல்லாத ஒரு கண்ணாடியை கொடுத்து அணிந்து பார்க்க சொன்னார். அதை அணிந்த பிறகு அங்கும் இங்கும் நடந்து பார்த்து விட்டு ஒரு ஸ்டைலை செய்து பார்த்தார். பத்து நிமிடமாக இந்த முயற்சியும் , பயிற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு என்னை பார்த்து 'ஓகே 'என அவருடைய ஸ்டைலில் கேட்டார். அந்தத் தருணம் தான் பாட்ஷா உதித்தார். 

இடைவேளை காட்சிக்கு முன்னர் ரஜினிகாந்த் எல்லாரையும் அடித்துப் போட்டுவிட்டு 'ஒருவாட்டி சொன்னா நூறு வாட்டி சொன்ன மாதிரி..' என டயலாக் இருந்தது. ஆனால் அதனை சொல்லும் போது ஏதோ இடையூறாக இருப்பதாக ஃபீல் செய்தார். அந்தக் காட்சி படமாக்கும் முன்னர் சூப்பர் ஸ்டார் என்னை அழைத்து ஒரு வாட்டி என்பது பெட்டரா? அல்லது ஒரு தடவை என்பது பெட்டரா? என கேட்டார். அப்புறம் யாரிடமும் சொல்லாதீர்கள். காத்திருங்கள் என சொல்லிவிட்டார். காட்சி படமாக்கும் போது 'ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி ..' என தனக்கே உரிய ஸ்டைலில் அந்த டயலாக்கை பேசினார். அந்தக் காட்சி ஓகே ஆனவுடன் படக்குழுவினர் அனைவரும் அவருக்கு அருகே வந்து  பாராட்டு தெரிவித்தனர். படப்பிடிப்பில் இருந்த ஊழியர் ஒருவர் இதை டயலாக்கை சொன்னவுடன் இந்த டயலாக் ஹிட்டாகி விடும் என்பது உறுதியானது. இது சாதாரண டயலாக் தான். ஆனால் சூப்பர் ஸ்டார் சொல்லும்போது அதன் மதிப்பே தனி.

அண்ணாமலை படத்தின் ரீ ரிலீஸ் விரைவில் நடைபெறும். ஆனால் அண்ணாமலை படம் அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் ரீ ரிலீஸ் ஆகிவிட்டது.'அண்ணாமலை', 'பாட்ஷா', 'வீரா' ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து நான் 'பாட்ஷாவும் நானும்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருக்கிறேன். புத்தகத்தை வாங்கி படித்து ரசித்து மகிழுங்கள். '' என்றார்.