பாலிவுட்டில் நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஆயிஷா கான். சின்னதிரையில் தொடர்களில் தொடங்கி பிக் பாஸ் 17 நிகழ்ச்சி என வலம் வந்தவர். இடையே தெலுங்கில் மற்றும் இந்தியிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் ‘ஷராரத்’ பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். குறிப்பாக இவரது நடனம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் வந்ததாக தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய அவர், “இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் என் உடலால் பாலியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்கிறேன். நான் சாதராணமாக ஒரு டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்தாலும் மக்களுக்கு அது பிரச்சனையாக மாறுகிறது. அதனால் எதையாவது பதிவிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டியுள்ளது. யாரோ ஒருவருக்காக நான் யோசிக்கும் சூழல் மிகவும் மோசமானது. இங்கு துன்புறுத்துபவர்கள் நம்மைச் சுற்றியுள்ள உண்மையான மனிதர்கள் என்று நினைக்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நான் மிரட்டப்படுவது சாதாரணமாக மாறிவிட்டது. நான் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, அங்கு என் தந்தையும் இருந்திருந்தார். அப்போது நான் தற்செயலாக எனது இன்ஸ்டாகிராமைத் திறந்தேன். அதில் நீண்ட காலமாக எனக்கு வந்த குரல் பதிவு இருந்தது. ஆனால் அது படப்பிடிப்பில் இருக்கும் ஒரு ஸ்பாட் பாய்தான் அனுப்பியது என பின்னாளில் தெரிய வந்தது. உடனே எனது தந்தைக்கும் படக்குழுவிற்கும் தெரிவித்தேன். பின்பு அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.
Follow Us