பிரசாத் வர்மா இயக்கத்தில் நானி தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ‘ஆவ்’(Awe). இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மெனன், ரெஜினா கசான்ட்ரா, ஈஷா ரெபா உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் நடித்திருந்தனர். இசையை பொறுத்தவரை மார்க் கே ராபின் இசையமைத்திருந்தார். 

Advertisment

சைக்காலஜிக்கல் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஒப்பனை ஆகிய பிரிவுகளில் தேசிய விருது வென்றது. இப்படம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இப்படம் விரைவில் நீக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அதாவது பிப்ரவரி 14-ஆம் தேதி இப்படத்தை கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என நெட்பிக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisment

12 (24)

இதற்கு அப்படத்தின் உரிமம் முடிந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதனால் மீண்டும் ஸ்ட்ரீமிங் உரிமை புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.