திரைத்துறையில் திரைக்கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திரைக்கலைஞர்களுக்கான விருது வழங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 11 ம் தேதி நடைபெற்றது.  

Advertisment

இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து தமிழக அரசு நடத்திய இந்த விழாவில், சிறந்த தமிழ்ப்படம் - பறந்து போ (ராம்), சிறந்த படம் - டூரிஸ்ட் பேமலி (அபிஷன் ஜீவிந்), சிறந்த நடிகர் - சசிகுமார் (டூரிஸ்டு பேமிலி), சிறந்த நடிகை - லிஜோமோல் ஜோஷ் (காதல் என்பது பொதுவுடைமை), சிறப்பு ஜூரி விருது - காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி), சிறப்பு ஜூரி விருது - ஷீலா ராஜ்குமார் (வேம்பு), சிறந்த ஒளிப்பதிவாளர் - எஸ்.பாண்டி குமார் (அலங்கு), சிறந்த எடிட்டர்- நாகூர் ராமச்சந்திரன் (மாயக்கூத்து) ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. 

Advertisment

இந்த விழாவில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. மேலும், தமிழில் அலங்கு,பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்டு பேமிலி, பாட்ஷா, 3பி.எச்.கே. என 12 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.