Advertisment

ஏவிஎம் சரவணனின் உடல் தகனம்

15 (31)

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் நிர்வகித்து வந்தவர் ஏவிஎம் சரவணன். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை தயாரித்தவர். எப்போதும் கைகளைக் கட்டிக்கொண்டு பணிவுடனும் நட்போடும் பழகக்கூடியவர். 

Advertisment

இவர் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நேற்று தான் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் அடுத்த நாளே உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் ஏவிஎம் பொதுமக்கள் அஞ்சலிக்காகக் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் ரஜினி, சூர்யா என பல்வேறு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இதையடுத்து அவரது உடல் அருகில் உள்ள ஏவிஎம் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்பு அங்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

film producer avm studio
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe