ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதில் ட்ரீம் ஆஸ் ஒன் பாடலை மைலி சைரஸ் வெளியிட்டார்.
இதுகுறித்து மைலி பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் பாடலை மார்க் ரான்சன் மற்றும் ஆண்ட்ரூ வயட் ஆகியோருடன் இணைந்து உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு பாடல் வரியும் நாம் எங்கிருந்தோம் என்பதையும், நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் பிரதிபலிக்கிறது. நம் அனைவருக்கும் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பதற்கான நம்பிக்கையை இந்தப் பாடல் வைத்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள மக்களுடன் மிகவும் உணர்வுப்பூர்வமாக இணைந்த ஒரு படத்திற்காக அர்த்தமுள்ள பாடல் ஒன்றை எழுதியது மகிழ்ச்சி” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/15/10-17-2025-11-15-18-34-25.jpg)