உலகளவில் பிரபலமான அவதார் படத்தின் மூன்றாம் பாகம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது. ஆறு இந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் பண்டோரா உலகின் கலாச்சார மற்றும் உணர்ச்சி நிலப்பரப்பை விரிவுபடுத்தும் ஃபயர் குலத்தின் தலைவரான வராங்கை அறிமுகப்படுத்துகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஐமேக்ஸ் முன்பதிவுகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. ரசிகர்களுக்கு டிக்கெட் புக்கிங்கை எளிமையாக்கும் வகையில் ஐமேக்ஸில் முன்னணியில் இருக்கும் PVR INOX நிறுவனம் திரையரங்குகளில் சிறப்பு ஐமேக்ஸ் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களை திறந்துள்ளது. 

Advertisment

PVR INOX உள்ளிட்ட திரையரங்குகள் செயலிகள், வலைதளங்கள் மற்றும் மார்க்கெட்டிங் சேனல்களில் டிஜிட்டல் ஒருங்கிணைப்புகளுடன் அவதார்-தீம் பிராண்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளன. எனவே, ரசிகர்கள் தற்போது சினிமா செயலிகள், வலைதளங்கள் அல்லது நேரடியாக திரையரங்க கவுண்டர்களிலோ தங்களது ஐமேக்ஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.