சரண் இயக்கத்தில் விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரிப்பில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்த படம் அட்டகாசம். பூஜா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ‘தல போல வருமா’ பாடல் அஜித் ரசிகர்களுக்கு ஆந்தமாக மாறியது.
கடந்த 2004 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 20 வருடங்களுக்கு மேல் கழித்து இப்படம் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு இன்று ரீ ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக புதிய ட்ரெய்லரும் வெளியிடப்பட்டு டிக்கெட் முன்பதிவும் சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தை காண அஜித் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
இதையடுத்து சில திரையரங்குகளில் கட்டவுட் வைத்து கொண்டாடத் தயாராகினார். ஆனால் தற்போது இப்படம் தள்ளிப் போகிறது. விநியோக சிக்கல் காரணமாக இப்படம் தள்ளிபோகியுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆர்வமுடன் முன்பதிவு செய்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் புது ரீ ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us