அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியான், முத்துக்குமார், ரெய்ச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்றவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. நாளை(27.02.2026) படம் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடந்தது. இதையடுத்து ப்ரீமியர் ஷோ நடைபெற்றுள்ளது. இதில் சூர்யா, ஜோதிகா, ஷாலினி அஜித்குமார், பிரபு, அதர்வா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ், கே.எஸ்.ரவிகுமார், நளினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்பு அனைவரும் படக்குழுவினரை பாராட்டினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/26/15-69-2026-02-26-16-43-10.jpg)
இந்த நிலையில் அட்லீ இப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில நேரங்களில் உலகமே பாரமாகத் தோன்றும்போது, இந்தப் படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது. எமோஷ்னலாகவும் அர்த்தமுள்ளதாகவும் மனிதநேயத்தில் வேரூன்றியும் இருக்கிறது. தயவு செய்து இப்படத்தை திரையரங்குகளில் பாருங்கள். ராதிகா மேம் சூப்பர்... சிவகார்த்திகேயன், ஹாட்ஸ் ஆஃப் மாமா. படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us