அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜவான்’. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் அட்லி ஜவான் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்தில் பேசிய அவர், “ஷாருக்கானும் நானும் நிச்சயம் மீண்டும் இணைவோமென நினைக்கிறேன். அது ஜவான் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இது சில ஆண்டுகள் கழித்து நடக்கலாம். ஆனால் சரியான நேரம் வரும்போது நிச்சயம் நானும் ஷாருக்கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம்” என்றார்.
அதே பேட்டியில் ‘டான் 3’ படத்தை ஷாருக்கானை வைத்து அவர் இயக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “அதை நானும் எங்கையோ படித்தேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அது ஒரு வதந்தி தான். அதில் துளியும் உண்மையில்லை” என்றார்.
Follow Us