சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 1960களில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் அதர்வா கலந்து கொண்டு பேசுகையில், “பொதுவாக ஒரு படம் என்றால் கேமரா ஃப்ரேம் உள்ளே வரையும்தான் செட் ஒர்க் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அதையும் தாண்டி 60-களுடைய செட்டப் அப்டியே இருக்கும். அதனால் நாங்களும் அந்த காலகட்டத்துக்கு மாறிவிடுவோம். எனக்கு பழங்காலத்து பொருட்கள் சேகரிப்பது ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் நானும் சிவகார்த்திகேயனும் இருக்கும் வீடு செட்டில் ஒரு விளக்கு இருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த விளக்கை கடந்து போகும்போது ஆட்டையப் போட்ரலாமா என யோசித்துக்கொண்டே இருப்பேன். ஒரு நாள் கிட்டத்தட்ட ஆட்டையப் போட்டுட்டேன். ஆனால் விளக்கை ஆட்டையப்போட்ட அதர்வா என சொன்னால் சரியாக இருக்காது என விட்டுட்டேன்.
சில பேரை மீட் பன்னும்போது இவர் உண்மையிலே நல்லவர் என தோன்றும். அது போல ரவி அண்ணாவை பார்த்ததும் தோன்றியது. அவர் என் வாழ்க்கையில் முக்கியமான ரோல் ப்ளே பன்னியிருக்கார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் மழை வருதே எனும் பாட்டில் அந்த முழு ஃப்ரேமில் தனியாக டான்ஸ் ஆடியிருப்பார். அவருடைய எனர்ஜி அப்படி இருந்தது. அதை என் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்தோம்.அவர் ஆடுவதை நாங்க எல்லாரும் பார்த்து சிரிச்சிட்டு இருந்தோம். ஆனால் எங்க அம்மா, எந்த ஒரு விஷயத்தையும் சந்தோஷமா செஞ்சா சூப்பரா இருக்கும் என சொன்னார். அதை இப்ப வரைக்கும் ஃபாலோ செய்கிறேன். நான் இருக்கும் இடத்தில் சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்வேன். சில பேருடைய கரியரைப் பார்த்தால் நம் ஆழ் மனதில் இருந்து பெருமையாக இருக்கும். அந்த மாதிரி தான் சிவகார்த்திகேயன் கரியரும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/494-2026-01-05-16-39-12.jpg)