கடந்த 2004ம் ஆண்டு வெளியான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அசின். முதல் படமே பெரிய அளவிலான வெற்றியை இவருக்கு தேடித் தந்தது. இதனையடுத்து இவர் நடித்த கஜினி திரைப்படம் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்ததோடு, இப்படம் இவரது நடிப்புத் திறமைக்காக விருதுகளையும் பெற்றுத் தந்தன. இதனைத் தொடர்ந்து வரலாறு, போக்கிரி, வேல், காவலன், தசாவதாரம் போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்த நிலையில், இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்க்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது, இல்லற வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஆரின் என்ற ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில், நேற்று (19-01-26) தங்களது 10ஆம் ஆண்டு திருமண நாளை நினைவுபடுத்தும் வகையில், ராகுல் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், “மகிழ்ச்சியான 10 ஆண்டுகள்” என பதிவிட்டுள்ளார். மேலும், “என் அன்பே... என் வாழ்க்கையில் நிகழும் அனைத்திற்கும் நீயே ஒரு சிறந்த இணை நிறுவனர். உன் வாழ்க்கைப் பயணத்தில் உன்னுடன் ஒரு துணை நடிகனாக இருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷடம். ஒரு வளரும் நிறுவனத்தைப் போல நமது வீட்டையும், என் இதயத்தையும் நீ திறம்பட வழி நடத்த வேண்டும். நம் வாழ்நாள் முழுவதும், நான் உன் அருகிலேயே இருக்க வேண்டும். நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து அசின் புகைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதை வரவேற்றுள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துகளையும் பொழிந்து வருகின்றனர்.
Follow Us