விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் ஹாட்ஸ்பாட். இதில் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, கௌரி ஜி கிஷன் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.
இரண்டாம் பாகத்தில் பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷ்ன், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிகிடா, சஞ்சனா திவாரி உள்ளிடோர் நடித்துள்ளனர். இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்கே இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் வழங்கியுள்ளார். சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது இப்படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனையொட்டி செய்தியாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அப்போது அஸ்வினிடம், “இப்போது நீங்கள் கதை கேட்கும் போது தூங்குகிறீர்களா” என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், “நான் 40 என சொன்னது பொதுவான ஒரு நம்பர். ஆனால் அதற்கு மேலேயும் கேட்டு இருக்கலாம் குறைவாகவும் கேட்டு இருக்கலாம். இவ்வளவு கதை நீங்கள் கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீர்களா? தியேட்டரில் படம் பார்க்கும்போது நிறைய பேர் தூங்குகிறார்கள். நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை. இருந்தாலும் அதன் பிறகு அதற்கு ஒரு விளக்க வீடியோ வெளியிட்டு இருக்கேன். திரும்பவும் இப்படி கேட்பது என்னை குத்துவது போல் இருக்கிறது” என காட்டமாக கூறினார்.
Follow Us