Advertisment

‘சிம்பு 51’ பட அப்டேட் வெளியிட்ட அஷ்வத் மாரிமுத்து!

10 (70)

வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு கைவசம் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என வைத்துள்ளார். இதில் தேசிங் பெரியசாமி படம் சிம்புவின் 50ஆவது படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து எந்த அப்டேட்டும் தற்போது இல்லாமல் இருக்கிறது. ஆனால் அவரது 51வது படமாக அறிவிக்கப்பட்ட அஷ்வத் மாரிமுத்து படம் தொடர்ந்து அடுத்தக் கட்ட பணிகளில் நகர்ந்து வருகிறது. 

Advertisment

முன்னதாக வெளியான அறிவிப்பு போஸ்டரில் ‘காட் ஆப் லவ்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் காதல் ஃபேண்டஸி ஜானரில் படம் உருவாகிறது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப் போஸ்டரே எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் சமீபத்தில் பட நாயகியாக மிருணாள் தாகூரை படக்குழு அணுகி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதே போல் இசையமைப்பாளராக அனிருத்தை கமிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் அப்டேட் ஒன்றை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளார். சிம்பு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பிற்கு தயாராகி வருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சிம்பு விரைவில் வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Ashwath Marimuthu actor simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe