2014-ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி. இந்த படத்தை தொடர்ந்து, இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, போன்ற படங்களில் நடித்தார்.
கடைசியாக தமிழில் இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான 'கன்னித்தீவு' என்கிற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். அதே போல் ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடிப்பில், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'MY 3' என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார். இப்போது 'திரைவி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இதுவரை தமிழில் எடுக்கப்படாத, வித்தியாயாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் இதில் ஆஷ்னா மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவரது லேட்டஸ்ட் சூட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.