அருண் விஜய் நடிப்பில் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ட தல’. இதில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவெர்சல் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அருண் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், “இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.  இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி சார். படம் படு வேகமாக இருந்தது, அதை சரியாக கட் செய்து கொடுத்துள்ளார். படத்தில் பாடல்களும் காட்சிகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும். நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். 

Advertisment

இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும். தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார்.