அருண் விஜய் நடிப்பில் கடைஇச்யாக ‘ரெட்ட தல’ படம் வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அதை தெரிவித்துள்ளார் அருண் விஜய்.
திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அருண் விஜய், பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது இதை கூறினார். அவர் பேசியதாவது, “இந்த ஆண்டில் முதல் முறையாக இந்த கோயிலில் தரிசனம் மேற்கொண்டேன். ஏழுமலையானைப் பார்ப்பது மிகப்பெரிய விஷயம். அவர் கூப்பிட்டால் தான் வர முடியும். அதனால் இங்கு வந்திருப்பது ரொம்ப சந்தோஷம். எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
அடுத்ததாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும். என்னுடைய பார்டர் படம் விரைவில் வெளியாகும்” என்றார். பார்டர் படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸுக்கு தயாராகி பின்பு வெளியாகாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் அருண் விஜய் முதல் முறையாக இயக்குநர் முத்தையாவுடன் கூட்டணி வைக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/435-2026-01-12-19-26-27.jpg)