Advertisment

அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் வெளியான ‘டிசி’ பட காதலர் தின வாழ்த்து!

36

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் ‘டிசி’. இப்படம் மூலம் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முழு நீள ஆக்சன் படமாக இப்படம் உருவாகிறது. படத்தின் டைட்டில் டீசர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் க்ளிம்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இதில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபியோடு ‘லப்பர் பந்து’ புகழ் சஞ்சனா பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாமிகா கபி, லோகேஷ் கனகராஜ் கதாபாத்திரம் அறிமுகமாக வசனமே இல்லாமல் காட்சிகள் நகர்கிறது. 

Advertisment

பின்பு ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும் கொலை செய்யும் காட்சிகளும் இடம் பெறுகிறது. அப்போது ‘ஏ ப்ளடி வேலன்டைன்(A BLOODY VALENTINE)’ என்று காதலர் தின வாழ்த்தையும் தெரிவித்துள்ளது. இந்த கோடையில் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் தன் படங்களில் அதிக ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை வழக்கமாக தனது ஸ்டைலாகவே வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

director arun matheswaran lokesh kanagaraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe