அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் கடந்த மாதம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அர்ஜூன் தாஸோடு, மலையாள இளம் நடிகை அன்னா பென், யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோரும் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இசை பணிகளை ஷான் ரோல்டன் கவனிக்கிறார். 

Advertisment

இப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ், மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் கிளவுட் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அர்ஜூன் தாஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்திற்கு ‘கான் சிட்டி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஒரு குழந்தையும் இடம் பெற்றுள்ளது. அதோடு உண்மை சம்பவ அடிப்படையில் இப்படம் உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.