பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. இதில் தேவராக ஜே.எம்.பஷிர் என்பவர் நடித்துள்ளார். இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் படத்தில் பணியாற்றிய ‘தேவர்’ ஆராய்ச்சியாளர் நவமணி கலந்துகொண்டார். அவர் பேசுகையில், படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்தார். அவர் பகிர்ந்ததாவது, “இப்படத்தின் சென்சார் சான்றிதழை பார்த்த போது நெஞ்சே வெடித்து போய்விட்டது. அதில் பத்திரிக்கையில் வந்த செய்திகளை தழுவி உருவாக்கப்பட்ட கற்பனை என போட்டிருக்கிறீர்கள். அது வரலாறா அல்லது கற்பனை கதையா, இதில் எது உண்மை. இது பெரிய மோசடி. தேவரைப் பற்றி சொல்லும் போது ஏன் இப்படி முன்னும் பின்னுமா மாறி மாறி நிக்கீறீங்க.
வரலாறுன்னா வரலாறுக் கதைன்னு சொல்லுங்க. கற்பனை கதைன்னா கற்பனை கதைன்னு சொல்லுங்க. அப்படி கற்பனை கதைன்னு சொன்னா அதுக்கு நாங்க ஆளே இல்லை” என்றார். உடனே படத்தின் இயக்குநர் அரவிந்த்ராஜ் பேசத்தெரியாம பேசிக்கொண்டு இருப்பதாக முணவிக்கொண்டே மேடையில் விட்டு கீழறங்கினார். அவரிடம் யார் பேசத்தெரியாம பேசிக்கிட்டு இருக்கா என நவமணி கோபமாக பேச பின்பு இருவருக்கும் வாக்கு வாதம் ஆனது. பின்பு இருவரையும் அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்த கீழிருந்த ஒருவர் டைரக்டர பத்தி எப்படி தப்பா பேசலாம் என கூச்சலிட, அதற்கும் கோவப்பட்ட நவமனி, தேவரப் பத்தி தப்பா படம் எடுக்குறாங்கன்னு பேசிக்கிட்டு இருக்கேன்... தேவர விட டைரக்டர் பெரிசா என ஆத்திரப்பட்டார்.
இதையடுத்து மைக்கப் பிடித்து பேசிய ஆர்.கே.சுரேஷ், “சினிமாவை பொறுத்தவரை நான் சென்சார் போர்டு மெம்பர். கற்பனைக் கதைன்னு போட்டா மட்டும் தான் அவங்க சென்சார் சர்டிபிகேட் கொடுப்பாங்க. இது சென்சார் போர்டோட ஒரு விதிமுறை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நம்ம சமுகத்துல இருக்குறவங்களே ஐய்யாவ பத்தி படம் எடுக்கல. ஆனால் ஒருவர் பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்துருக்காரு. அவருக்கு உண்மையிலேயே பாராட்டுக்கள். இந்த படம் தழுவி எடுத்ததுதான். நவமணி ஐயா சொல்ற மாதிரி முழுசா ஒரு படம் எடுக்கனும்னா அடுத்த பாகம் எடுப்போம்” என்றவர் அதை முக்குலத்தோரை சேர்ந்த நாங்க எல்லாருமே சேர்ந்து தயாரிப்போம் எனவும் கூறி முடித்தார்.