Advertisment

மலேசியாவில் ‘அரசன்’ பட அப்டேட் கொடுத்த சிம்பு

16 (26)

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தாணு தயாரிக்கும் இப்படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகிறது. அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் அறிவிப்பு புரொமோ வெளியானது. அதில் சிம்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் காட்சிகளும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. 

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கபடுவதாக திட்டமிடப்பட்டு தொடங்கப்படவில்லை. ஏற்கனவே பலமுறை தள்ளி போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் படப்பிடிப்பு குறித்தான அப்டேட் தெரிவிக்கப்படமாலே இருந்தது. 

Advertisment

இந்த நிலையில் சிம்பு மலேசியாவில் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு ரசிகர்களிடம் பேசிய அவர் அரசன் படப்பிடிப்பு அப்டேட்டையும் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “மதுரையில் வரும் 9ஆம் தேதி அரசன் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. இங்கயிருந்து நேராக ஷூட்டிங்குக்கு தான் போகிறேன்” என்றார்.   

actor simbu Vetrimaaran, Arasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe