பிரபு தேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படம் ‘மூன்வாக்’. இப்படத்தை மனோஜ் என்.எஸ். இயக்குகிறார். மேலும் திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்டோருடன் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் பேனரில் தயாரிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பான் இந்திய ரீதியில் வெளியாகும் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. 5 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் வரும் எல்லா பாடல்களையும் இசையமைத்ததோடு பாடியும் உள்ளார். முதல் முறையாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தில் நடிகராகவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை போஸ்டர் மூலம் படக்குழு தெரிவித்துள்ளது. அவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற அவரது சொந்த பெயரிலே ஒரு கோபக்கார இளம் இயக்குநராக நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரோடு பிரபுதேவா பாபூட்டி என்ற கதாபாத்திரத்தில் மகிழ்ச்சியான இளம் நடன இயக்குநராக நடித்துள்ளதாகவும் யோகி பாபு துபாய் மேத்யூ என்ற கதாபாத்திரத்தில் பிரபுதேவாவுக்கு முதல் எதிரியாகவும் அஜு வர்கீஸ் லார்ட் ஜோகோவிச் என்ற கதாபாத்திரத்தில் பிரபுதேவாவுக்கு உறவினராகவும் அர்ஜுன் அசோகன் லூனா என்ற கதாபாத்திரத்தில் பிரபுதேவாவின் மற்றொரு உறவினராகவும் சதீஷ், ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்தில் பிரபுதேவாவின் நண்பராகவும் நடித்துள்ளதாக அவர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us