இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவி - அறிமுக இயக்குநர் அர்ஜுனனின் ‘ஜீனி’, பிரபு தேவா - மனோஜின் ‘மூன் வாக்’ மற்றும் எஸ்.ஜே.இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்திய யூட்யூப் பாட்காஸ்ட் ஒன்றில் மதங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் எல்லா மதங்களிக்கும் ரசிகன். இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை படித்திருக்கிறேன். மதத்தின் பெயரால் மற்றவர்களைக் கொல்வது அல்லது தீங்கு செய்வதுதான் எனக்கு ஒரே பிரச்சனை. நான் மகிழ்விக்க விரும்புகிறேன், நான் இசை கச்சேரி நடத்தும்போது, ​​அது ஒரு புனித தலமாக உணர்கிறேன். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடுகிறார்கள்.
சூஃபித்துவம் என்பது இறப்பதற்கு முன் இறப்பது போன்றது. உங்களை சுயமாக சிந்திக்க வைக்கும் திரைகள் இருக்கிறது. அந்த திரைகளை அகற்ற, நீங்கள் அழிந்து போக வேண்டும். காமம், பேராசை, பொறாமை அல்லது தீர்ப்புவாதம் அனைத்தும் இறக்க வேண்டும். உங்கள் ஈகோ போய்விட்டால், பின்னர் நீங்கள் கடவுளைப் போல வெளிப்படையானவராக மாறுவீர்கள்” என்றார்.
Follow Us