அருண் விஜய் நடிப்பில் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ட தல’. இதில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவெர்சல் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குநர். என்னுடன் கஜினி, 7ஆம் அறிவு என நிறைய படங்களில் வேலை பார்த்திருக்கார். எனக்கு ரொம்ப பிடித்த நபர். இந்த படத்தின் டைட்டில் என்னுடைய படத்துக்காக வைத்திருந்தேன். ஆனால் திடீரென திருக்குமரன் வந்து கேட்டதால் கொடுத்துவிட்டேன். கொடுக்கவில்லை என்றால் பிடிங்கிவிட்டு போயிருப்பார்கள். இந்த டைட்டிலை வைத்து அவர் ஒரு படம் எடுத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சி.
ட்ரெய்லரை பார்க்கும் போது மிரட்டலாக இருந்தது. பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பிக்கை தருகிறது. அவரை நான் தான் மான் கராத்தே மூலம் அறிமுகப்படுத்தினேன். அதனால் என்னுடைய பேனரில் அவர் ஒரு படம் பண்ண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Follow Us