தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் கடைசியாக பைசன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த தீபாவளி முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் ‘லாக் டவுன்’.
அறிமுக இயக்குனர் ஏ ஆர் ஜீவா இயக்கியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சார்லி, நிரோஷா உள்ளிடடோர் நடித்துள்ளனர். இசையை பொறுத்தவரை என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விப்பின் ஆகியோர் கவனித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியாக திட்டமிட்டிருந்தது. ஆனால் கனமழைக் காரணமாக தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்பு அதே மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் புது தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புது தேதி வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 30ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
Every pause had a purpose. 🎬 #Lockdown in cinemas Jan 30. 🗓️#LockdownInCinemasJan30@anupamahere#ARJeeva@LycaProductions#Subaskaran@gkmtamilkumaran#PriyaaaVenkat@shakthi_dop@NRRaghunanthan@sidvipin@EditorSabu@sherif_choreo#SriGirish#OmSivaprakash… pic.twitter.com/hqNtUX8qxl
— Lyca Productions (@LycaProductions) January 23, 2026
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/23/05-15-2026-01-23-18-52-48.jpg)