மலையாளத்தில் ‘கும்பலங்கி நைட்ஸ்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர் அன்னா பென். தொடர்ந்து அங்கு ஹெலன், கப்பேலா, நைட் டிரைவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். பின் தெலுங்கில் கல்கி 2898 ஏடி படம் மூலம் அறிமுகமாகியிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழில் சூரி நடித்த கொட்டுக்காளி படம் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து அவர் தமிழில் எந்த படமும் கமிட் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது புதுப்படம் ஒன்றை கமிட் செய்துள்ளார். இப்படத்தின் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க இசை பணிகளை ஷான் ரோல்டன் கவனிக்கிறார்.
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ், மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் கிளவுட் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் பூஜை இன்று நடந்தது இதில் பட குழுவினர் கலந்து கொண்டனர்.
Follow Us